மின்னல் தாக்கி விவசாயி பலி

தேவகோட்டை அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.

Update: 2021-05-15 17:33 GMT
தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த திருவேகம்பத்தூர் அருகே உள்ள கிழவனி கிராமத்தைச் சேர்ந்தவர் அருளானந்து (வயது 55) விவசாயி. இவர் திருவேகம்பத்தூர் வந்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பயங்கர காற்றுடன் இடி மின்னல் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. இதனால் களத்தூர் அருகே உள்ள பனை மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி நின்றார்.அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்