பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் லாரிகளில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்குள்ள அரசு மாணவர்கள் விடுதி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அது சமயம் அரசு அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி ஒரு லாரி வந்துள்ளது. போலீசாரை பார்த்த உடன் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபாலு மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.