கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.;

Update: 2021-05-15 17:00 GMT
பொன்னமராவதி, மே.16-
பொன்னமராவதி அருகே அஞ்சுபுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அங்குதன் என்பவரது கன்றுக்குட்டி மாந்தக்குடிபட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டியை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். இதை அப்பகுதி கிராம மக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்