25ந்தேதி வரைமீன்பிடிக்க செல்வதில்லை
25ந்தேதி வரைமீன்பிடிக்க செல்வதில்லை என்று நாட்டுப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ராமேசுவரம்,
கொரோன பாதிப்பு அதிகாரித்து வருகிறது. இந்த நிலையில் பாம்பனில் அனைத்து நாட்டுப்படகு மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவர் எஸ்.பி ராயப்பன் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக வருகிற 25-ந் தேதி வரையிலும் பாம்பனில் உள்ள அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் இருப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே மீன்பிடி தடை காலத்தை தொடர்ந்து பாம்பன், ராமேசுவரம் உள்பட மாவட்டம் முழுவதும் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.