கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா ெதாற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-05-15 15:58 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா ெதாற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 612 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆக்சிஜன் படுக்கைகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு தரப்பில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், கோவிட் கேர் சென்டர்கள் மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று மாலை வரை உள்ள நிலவரப்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள 563 ஆக்சிஜன் படுக்கைகளில் 536 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 409 சாதாரன படுக்கைகளில் 297 படுக்கைகளிலும், ஐ.சி.யு. வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளிலும் நோயாளிகள் சிகிக்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கோவிட் கேர் சென்டரில் உள்ள 1513 படுக்கைகளில் 1165 நோயாளிகள் சிகிச்சை பெற்ற வருகின்றனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

30 ஆயிரத்தை தாண்டியது

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 30 ஆயிரத்து 243 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 612 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 

இதுவரை 25 ஆயிரத்து 730 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 4,169 ேபர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 344 பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்