குடியாத்தத்தில் ஊரடங்கை மீறியதாக 9 கடைகளுக்கு ‘சீல்’

குடியாத்தத்தில் ஊரடங்கை மீறியதாக 9 கடைகளுக்கு ‘சீல்’

Update: 2021-05-15 09:36 GMT
குடியாத்தம்

குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகள் திறந்து இருப்பதாக புகார்கள் வந்தது. அதன் பேரில் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் உத்தரவின் பேரில் குடியாத்தம் தாசில்தார் வத்சலா தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமரன், கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர்கள் கோபி, ரஞ்சித் குமார், ராஜேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினர் நேற்று சந்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர். 

அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 3 நகைக் கடைகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 2 நகை கடைகள், சிமெண்டு கடை உள்பட 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

குடியாத்தம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சிசில் தாமஸ், சுகாதார அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் நேற்று குடியாத்தம் நகராட்சி பகுதியில் சமூக இடைவெளியை பின்பற்றாத, முக கவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம்வித்து ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை பின்பற்றாத ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்