வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 752 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 752 பேருக்கு கொரோனா

Update: 2021-05-15 09:35 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. தொற்றின் பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டிவிட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டபோதிலும் பாதிப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 752 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய பாதிப்பில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 400-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பாதிப்பு கண்டறிந்தவர்களில் அறிகுறி இல்லாதவர்கள் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கிராமப்புறங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
அரசின் வழிமுறைகளை பின்பற்றி கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்