பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

Update: 2021-05-15 09:35 GMT
கோத்தகிரி

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக நேற்று காலை கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையிலான போலீசார் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா குறித்தும், அது பரவாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

மேலும் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும், உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி மற்றும் சோப்பு கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினர். அதன்பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்