அம்பை பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை
அம்பை பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை இன்று முதல் செயல்படுகிறது.
அம்பை:
அம்பை நகராட்சி சார்பில் அம்பை-பாபநாசம் மெயின் ரோட்டில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரச்சந்தை இயங்கி வந்தது. கடந்த சனிக்கிழமை சந்தை நடந்தபோது அம்பை நகராட்சி ஆணையாளர் பார்கவி, சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தை முடிவடையும் நேரமான மதியம் 12 மணிக்கு மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததை பார்த்து அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இந்த நிலையில் சந்தையில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடந்த ஊரடங்கின்போது அமல்படுத்தப்பட்டதை போன்று அம்பை பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் அம்பை பஸ் நிலையத்தில் தினமும் மதியம் 12 மணி வரை தற்காலிக சந்தை நடைபெறும் என்று நகராட்சி சார்பில் ெதரிவிக்கப்பட்டு உள்ளது.