புதிதாக 798 பேருக்கு தொற்று உறுதி: சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது 18 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் புதிதாக 798 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-05-14 21:17 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 798 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகி உள்ளனர்.
உயிரிழப்புகள் அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வருகின்றது. குறிப்பாக கொரோனாவுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 763 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 424 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
வீரபாண்டியில் 54 பேர், ஓமலூரில் 42 பேர், ஆத்தூரில் 36, அயோத்தியாப்பட்டணத்தில் 32 பேர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 30 பேர், கொங்கணாபுரத்தில் 21 பேர், சேலம் ஒன்றியம், பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 18 பேர், நங்கவள்ளி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 17 பேர், மகுடஞ்சாவடியில் 12 பேர், தாரமங்கலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 7 பேர், கெங்கவல்லியில் 5 பேர், கொளத்தூர், தலைவாசல், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், காடையாம்பட்டி, மேச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், நரசிங்கபுரத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
50 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 671 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 4 ஆயிரத்து 228 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு அங்கு கொரோனா நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
18 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 60, 33, 60, 55, 49, 58, 76 ஆகிய வயதுடைய ஆண்களும், 65, 79 வயதுடைய மூதாட்டிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் சேலத்தை சேர்ந்த 45, 78 வயதுடைய ஆண்களும், 45, 72 வயதுடைய பெண்களும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் பலியானார்கள்.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலத்தை சேர்ந்த 69 வயதுடைய மூதாட்டி திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், 72 வயதுடைய முதியவர் குமாரபாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர்.
இதுதவிர 52, 58 ஆகிய வயதுடைய ஆண்களும், 40 வயதுடைய பெண்ணும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 656 ஆக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்