ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஆலோசனை
ஆக்சிஜன் உற்பத்தியாளர்களை திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இ.திருமகன் ஈவெரா. எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்தில் பதவி ஏற்று ஈரோடு திரும்பிய அவர் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.
நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரதான ஆக்சிஜன் உற்பத்தியாளர்களை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம் ஆக்சிஜன் இருப்பு குறித்து கேட்டு அறிந்தார். இதுபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற அலுவலகத்தையும் அவர் சென்று பார்வையிட்டார்.