சேலத்தில் தேவையின்றி ஊர் சுற்றியவர்களை நிறுத்தி உறுதிமொழி ஏற்க வைத்த போலீசார்

சேலத்தில் தேவையின்றி ஊர் சுற்றியவர்களை நிறுத்தி போலீசார் உறுதிமொழி ஏற்க வைத்தனர்.

Update: 2021-05-14 20:59 GMT
சேலம்:
சேலம் மாநகரில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, திருச்சி மெயின் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்கத்தைவிட கூடுதலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 
இதனிடையே சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது தேவையின்றி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றிய பலரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை இனி தேவையின்றி வாகனத்தில் ஊர்சுற்ற மாட்டேன். நோயை பரப்ப மாட்டேன் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை ஏற்க வைத்தனர். அதன் பின்பு அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் முழு ஊரடங்கையொட்டி அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம். பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தால் தான் தொற்று பரவுவது தடுக்கப்படும். போலீசார் தானே கூறுகிறார்கள் என அலட்சியப்படுத்த வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் வந்து நோயை பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்