கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி ஒரே நாளில் 712 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி ஒரே நாளில் 712 பேர் பாதிப்பு

Update: 2021-05-14 20:47 GMT
கிருஷ்ணகிரி, மே.15-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியான நிலையில், ஒரே நாளில் 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 55 வயது பெண். இவர் கடந்த 6-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 12-ந் தேதி இறந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 90 வயது முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக 6-ந் தேதி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 8-ந் தேதி இறந்து விட்டார். அதே போல கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர் கொரோனா காரணமாக 9-ந் தேதி ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 11-ந் தேதி இறந்து விட்டார். அதே போல 77 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பு காரணமாக கிண்டியில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கடந்த 11-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 12-ந் தேதி இறந்து விட்டார்.
712 பேர் பாதிப்பு
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில், 712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 319 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 21 ஆயிரத்து 568 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 ஆயிரத்து 881 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 531 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக உள்ளது. 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்