நாமக்கல்லில் ஒரே நாளில் 12 பேர் பலி; பொதுமக்கள் அதிர்ச்சி
நாமக்கல்லில் ஒரே நாளில் 12 பேர் பலியாகினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 560 பேர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதில் 4 பேர் பலியானதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நாமக்கல்லில் நேற்று ஒரே நாளில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள், கொரோனா நெகட்டிவ் வந்தவர்கள் மற்றும் இதர நோயாளிகள் என மொத்தம் 12 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து உரிய விளக்கம் ஏதும் வழங்கப்படவில்லை. நாமக்கல்லில் ஒரே நாளில் 12 பலியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.