மாயமான ஜவுளி வியாபாரி பிணமாக மீட்பு

அருப்புக்கோட்டை அருகே மாயமான ஜவுளி வியாபாரி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை ெசய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-05-14 20:24 GMT
அருப்புக்கோட்ைட,
அருப்புக்கோட்டை அருகே மாயமான ஜவுளி வியாபாரி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை ெசய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஜவுளி வியாபாரம் 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி லிங்காபுரத்தை சேர்ந்தவர் பொன்னையா மகன் செல்வராஜ் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. 
இவர் மும்பைக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். தற்போது ெகாரோனா தொற்று பரவி வருவதால் ஜவுளி வியாபாரத்திற்கு செல்லாமல் ஊருக்கு வந்து, அவரது தந்தை பொன்னையாவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியில் சென்ற செல்வராஜ் மீண்டும் வீடு திரும்பவில்லை. 
கண்மாயில் பிணம் 
இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பொன்னையா இதுகுறித்து பந்தல்குடி போலீசில் புகார் அளித்தார். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான செல்வராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் பந்தல்குடி அருகே பெரிய கண்மாயில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு விசாரித்த போது இறந்து கிடந்தவர் மாயமான செல்வராஜ் என்பது தெரியவந்தது.  செல்வராஜை கொலை செய்துவிட்டு கண்மாயில் வீசிவிட்டு சென்றனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்