விதிமுறைகளை மீறிய 10 கடைகளுக்கு “சீல்”

ராஜபாளையத்தில் விதிகளை மீறிய 10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.;

Update: 2021-05-14 20:10 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொது மக்களின் வசதிக்காக மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க நேற்று வரை அரசு அனுமதித்து உள்ளது. 
இந்தநிலையில் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதிகமாக கூட்டம் கூட்டியிருந்த 2 சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் விதிமுறைகளை மீறி கொரோனா தொற்று பரவும் விதமாக விற்பனை செய்த 7 டீக்கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். 
பின்னர் அனுமதியின்றி இயங்கி வந்த செல்போன் கடை ஒன்றுக்கும் சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்