விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-14 19:51 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 48). விவசாயியான இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த ராமலிங்கத்திற்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்