தனியார் நிதி நிறுவன ஊழியர் சாவு

வேன் மோதியதில் தனியார் நிதி நிறுவன ஊழியர் இறந்தார்.

Update: 2021-05-14 19:45 GMT
செக்கானூரணி,மே.
செக்கானூரணி அருகே உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் லோகிதாசன் மகன் ஆனந்தகுமார் (வயது 38). மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் பால் வாங்குவதற்காக செக்கானூரணி சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது  தேனி-மதுரை சாலையில் தனியார் வேன் ஆனந்தகுமார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்