போலீசாருக்கு கபசுரகுடிநீர் வழங்கல்

போலீசாருக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.;

Update: 2021-05-14 19:07 GMT
கரூர், மே.15-
கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ துறையினர், போலீசார், வருவாய் துறையினர், தூய்மை பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், எள் உருண்டை, கடலை மிட்டாய், பிஸ்கட் ஆகியவற்றை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் வழங்கினர்.

மேலும் செய்திகள்