கொரோனா பாதித்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-14 18:44 GMT
ஹாவேரி:


ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

முதியவருக்கு கொரோனா

ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரியில் ஹாவேரி மாவட்டம் ராணி பென்னூர் தாலுகா கங்காஜலு தாண்டா கிராமத்தை சேர்ந்த யல்லப்பா லமானி (வயது 70) என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் அவதிப்பட்டார். இதற்காக ராணி பென்னூர் தாலுகா ஆஸ்பத்திரியில் முதலில் யல்லப்பா லமானி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 5-ந் தேதி ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் யல்லப்பா லமானி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் யல்லப்பா லமானி தூக்கில் பிணமாக தொங்கினார். காலையில் எழுந்த சக கொரோனா நோயாளிகள் யல்லப்பா லமானி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். சில நோயாளிகள் பதறியபடி அங்கும், இங்கும் ஓடினார்கள். தகவல் அறிந்ததும் ஊழியர்கள் விரைந்து வந்தனர். மேலும் ஹாவேரி டவுன் போலீசார் விரைந்து வந்து யல்லப்பா லமானியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததால் அவர் மனம் உடைந்து வாழ்ந்து வந்துள்ளார். இதன் காரணமாக கொரோனா வார்டிலேயே தனது லுங்கியில் தூக்குப்போட்டு கொண்டு அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஹாவேரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்