பொள்ளாச்சியில் 5 பேர் கொரோனாவுக்கு பலி
பொள்ளாச்சி பகுதியில் புதிய உச்சமாக 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், 5 பேர் பலியானார்கள்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் புதிய உச்சமாக 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், 5 பேர் பலியானார்கள்.
316 பேருக்கு கொரோனா
பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதுபோன்று பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் 44 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 50 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 80 பேருக்கும், சுல்தான்பேட்டையில் 32 பேருக்கும், கிணத்துக்கடவில் 50 பேருக்கும், வால்பாறையில் 12 பேர் என்று மொத்தம் 316 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
5 பேர் பலி
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, சுல்தான்பேட்டை, வால்பாறை பகுதிகளில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி ஜோதி நகர், கோட்டூர் மலையாண்டிபட்டிணம், ஒடையகுளம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதம் 3 முதியவர்களும், குள்ளேகவுண்டன்புதூரில் பெண் ஒருவரும், சுல்தான்பேட்டையில் ஒருவரும் சேர்த்து ஒரே நாளில் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.