பெண் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மானாமதுரையில் பெண் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த ஏ.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த சத்தியேந்திரன் என்பவரின் மனைவி வளர்மதி (வயது 22) என்பவர் கடந்த 7.3.2021-ந் அன்று கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுசா மனோகரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கைதான இவர்கள் மீது மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு நகல் மதுரை சிறையில் உள்ள அவர்கள் 2 பேருக்கும் வழங்கப்பட்டது.
மானாமதுரையில் பெண் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெண் கொலை
இது தொடர்பாக மானாமதுரை,நெடுங்குளத்தை சேர்ந்த தனசேகர்(26), கிளாங்காட்டூரை சேர்ந்த காட்டுராஜா(26) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குண்டர் சட்டத்தில் கைது