தொண்டி,
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில திருவாடானை அருகே உள்ள கடம்பாகுடி கிராமத்தில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு மேல் ஒரு மளிகை கடையில் வியாபாரம் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று திருவாடானை போலீசார் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் கடையை பூட்டி சீல் வைத்தார்.