வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது

வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது செய்தனர்.

Update: 2021-05-14 17:12 GMT
ஆவூர், மே.15-
மாத்தூர் அருகே வடுகப்பட்டி கிராமத்தில் சிலர் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த  மாரிமுத்து (வயது 45), சீனிவாசன் (26) ஆகியோர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 27 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்