ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி மரணம்

பெரியகுளத்தில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி மரணம் அடைந்தார்.

Update: 2021-05-14 17:02 GMT
பெரியகுளம்: 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் (வயது 61). 

இவர் ேதனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தில் வசித்து வந்தார்.

 உடல்நலக்குறைவால் நேற்று காலை அவர் தனது வீட்டில் மரணம் அடைந்தார். 

இதுகுறித்து அறிந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னையில் இருந்து  பெரியகுளத்திற்கு வந்தனர். 

அங்கு பாலமுருகனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

இதேபோல் அவருடைய உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகளும், தி.மு.க. சார்பில் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் சரவணக்குமார், மகாராஜன், மாநில செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.மூக்கையா மற்றும் தி.மு.க நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்