தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொடர்பாக ஆலோசனை பெற தொலைபேசி எண்கள் கலெக்டர் அறிவிப்பு

கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனை பெற தொலைபேசி எண்களை கலெக்டர் அறிவித்துள்ளார்

Update: 2021-05-14 16:42 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான ஆலோசனை பெற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆலோசனைக்குழு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், மற்றும் மன அழுத்தம் தொடர்பான ஆலோசனைகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மருத்துவ ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 
அந்த ஆலோசனை குழுக்களிடம் பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 6383755237, 6383755238, 6383755239, 6383755240, 6383755241 என்ற தொலைபேசிகளிலும்,
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 6383755242, 6383755243, 6383755244,  6383755245, 6383755247 தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
கோவில்பட்டி
அதுபோல் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள 6383755248, 6383755249, 6383755250, 6383755251, 6383755252 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்
மேலும் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்கள் 6383755253, 6383755254, 6383755255, 6383755256, 6383755257 ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகள் பெறலாம்.
கட்டுப்பாட்டு அறை
அதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்