771 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பெண் உள்பட 7 பேர் பலியாகினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பெண் உள்பட 7 பேர் பலியாகினர்.
771 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 500க்கும் மாவட்டத்தில் ஒரு நாள் பாதிப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது 1000ஐ ஒரு நாள் பாதிப்பு நெருங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்து 661ஆக உயர்ந்துள்ளது.
7 பேர் பலி
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 343 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 210ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவால் பாதித்த 5 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகினர். அதன்படி திருப்பூரை சேர்ந்த 64 வயது ஆண் கொரோனாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பலியாகினர். திருப்பூரை சேர்ந்த 61, 56 வயது ஆண் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 71 வயது ஆண் கோவை தனியார் மருத்துவமனையிலும், 53 வயது ஆண் சேலம் தனியார் மருத்துவமனையிலும், 67 வயது ஆண், 64 வயது பெண் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 272ஆக உயர்ந்துள்ளது.