சனி பகவான் கோவிலை சேதப்படுத்திய காட்டுயானைகள்

சனி பகவான் கோவிலை சேதப்படுத்திய காட்டுயானைகள்.

Update: 2021-05-14 01:18 GMT
கூடலூர்,

கூடலூரில் 27-வது மைல் பகுதியில் சனிபகவான் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் சில காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து கோவில் கதவை உடைத்து, அட்டகாசம் செய்தன. தொடர்ந்து அங்கிருந்த பூஜை பொருட்கள் மற்றும் மரச்சாமான்களை தூக்கி வீசி சேதப்படுத்தின. 

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

மேலும் செய்திகள்