காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை
காட்டுயானை தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை.
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-4) பகுதியை சேர்ந்தவர் அழகர். இவருடைய மனைவி பூங்கொடி(வயது 54). இவரை நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் காட்டுயானை மிதித்து கொன்றது.
இந்த நிலையில் அவரது உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.4 லட்சத்தை வனத்துறையினர் வழங்கினர்.