கூடலூர்
பந்தலூர் அருகே தேவாலா அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-4) பகுதியில் பூங்கொடி என்ற பெண் தொழிலாளி நேற்று முன்தினம் இரவில் காட்டுயானை தாக்கி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து காட்டுயானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக்கோரி கூடலூர், பந்தலூர் பகுதியில் பாண்டியாறு, தேவாலா, நெல்லியாளம், சேரங்கோடு, கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அரசு தேயிலை தோட்ட கழக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.