வாகன தணிக்கையை தீவிரப்படுத்தும் போலீசார்

திருப்பூர் மாவட்டத்தில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தும் போலீசார்

Update: 2021-05-13 21:31 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடந்த 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகை கடை, காய்கறி, பலசரக்கு கடைகள், டீக்கடைகள் மதியம் 12 மணி வரை திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை நேரத்தில் வாகன போக்கு வரத்து மாநகரில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. அதன் காரணமாக பனியன் நிறுவன தொழிலாளர்களும் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்த போதிலும் வாகன நெருக்கடி என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மதியம் 12 மணிக்கு பிறகு மாநகரில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மேல் பனியன் உற்பத்தியை நிறுத்தி வருகிற 24-ந் தேதி வரை மூட உள்ளதாக அறிவித்துள்ளனர். அதனால் போலீசார் மாநகரில் இன்று முதல் தீவிர வாகன கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்