கொரோனா நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய 8 வயது இரட்டையர்கள்

கொரோனா நிவாரண நிதிக்கு 8 வயது இரட்டையர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டாிடம் சேமிப்பு பணத்தை வழங்கினா்.;

Update: 2021-05-13 21:22 GMT
ஈரோடு
ஈரோடு தங்கபெருமாள் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கியாஸ் கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய 8 வயதான இரட்டை மகன்கள் இனியன், இன்பன் ஆகியோர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொண்ட 2 மாணவர்களும் தங்களது சேமிப்பு பணத்தை பொதுமக்களின் நலனுக்காக கொடுக்க முன்வந்ததுடன், தங்களது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்களது குழந்தைகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்கள். அங்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனை சந்தித்த மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை வழங்கியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட கலெக்டர் கதிரவன், மாணவர்கள் இனியன், இன்பன் ஆகியோரை பாராட்டினார்.

மேலும் செய்திகள்