ஊத்தங்கரை அருகே மூதாட்டி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
ஊத்தங்கரை அருகே மூதாட்டி வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
கல்லாவி:
ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு அருகே உள்ள உமையனூரை சேர்ந்தவர் பேபி (வயது 60). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு தனது விவசாய நிலத்திற்கு சென்றார். திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ½ பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பேபி ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டுவை சேர்ந்த சதீஷ் (வயது 37), உமையனூரை சேர்ந்த பிரபாகரன் (32) ஆகியோர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
=====