அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்க மாநில நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2021-05-13 20:08 GMT
விருதுநகர், 
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி மற்றும் பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழக அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது. அரசு ஊழியர்கள் குறைந்த பட்சம் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதல்-அமைச்சர் கொரோனாநிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி 2 லட்சம் அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உள்ளனர். மே மாத ஊதியத்திலிருந்தே இந்த தொகை வழங்கப்படும்.
 இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்