ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை நடத்தியவர்கள் மீது வழக்கு
கடையநல்லூரில் தொழுகை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பகுதியில் சில முஸ்லிம் அமைப்பினர் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடினார்கள். இதில் ஒரு முஸ்லிம் அமைப்பினர் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி தொழுகை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார், அந்த அமைப்பின் நிர்வாகிகள் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.