காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-13 19:17 GMT
திருவெறும்பூர், 
திருவெறும்பூா் காட்டூர் வீதிவடங்கம் பகுதியை சேர்ந்தவர் அருமைராஜ் (வயது 31). இவர் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த லதாவை (27) கடந்த 3 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அருமைராஜ், தனது மனைவி மற்றும் பெற்றோருடன் காட்டூர், பாரதிதாசன் நகர் 3-வது தெருவில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு அருமைராஜ் தனது மனைவியை பெற்றோரிடம் விட்டுவிட்டு மஸ்கட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த லதா நேற்று மாலை தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்தபுகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்