மானூர்:
மானூர் போலீசார் சுப்பையாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள கோவில் மண்டபத்தில் 4 பேர் சூதாடிக் கொண்டு இருந்தனர். போலீசார் வருவதை அறிந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேரை மட்டும் போலீசார் பிடித்தனர்.
பிடிப்பட்டவர்கள் அதே ஊரைச் சேர்ந்த சீனிப்பாண்டி (வயது 31), பிரமசிவன் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய கலையரசன் (30), மதன் (32) ஆகியோரை போலீசார் தேடிவருகிறார்கள்.