சீமானின் தந்தை மரணம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

Update: 2021-05-13 17:50 GMT
இளையான்குடி,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

சீமானின் தந்தை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை யா.செந்தமிழன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.
சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி அருகே தனது சொந்த ஊரான அரணையூர் கிராமத்தில் செந்தமிழன் வசித்து வந்தார். விவசாயியான இவரது முதல் மனைவி அருளாயி. இவர்களது மகன் மரியநாயகம். அருளாயி இறந்தவுடன் அன்னம்மாள் என்பவரை செந்தமிழன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீமான், இளையதம்பி ஆகிய 2 மகன்களும், அருளாயி, அன்பரசி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

அஞ்சலி

கடந்த சில வாரங்களாக செந்தமிழன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அவர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் சீமான் சென்னையில் இருந்து புறப்பட்டு அரணையூருக்கு வந்தார். செந்தமிழன் உடலுக்கு நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்