கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் ரூ.19 ஆயிரம் அபராதம் வசூல்

கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் ரூ.19 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

Update: 2021-05-13 17:39 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்புநடவடிக்கை கடைபிடிக்காதவர்களுக்கு  அபராதம் விதிக்க பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். 

அதன்பேரில், வருவாய்த்துறையினர் கிணத்துக்கடவு, வடசித்தூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்டறிய கிணத்துக்கடவு தாலுகாவில் 4 கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சமூக இடைவெளி கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா தடுப்பு நடவடிக்களை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்