காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது-மாங்குடி எம்.எல்.ஏ. தகவல்

காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பதாக ஆய்வு செய்த காரைக்குடி தொகுதி மாங்குடி எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2021-05-13 17:01 GMT
காரைக்குடி,

காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான அளவில் ஆக்சிஜன் இருப்பதாக ஆய்வு செய்த காரைக்குடி தொகுதி மாங்குடி எம்.எல்.ஏ கூறினார்.

மருத்துவமனையில் ஆய்வு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மாங்குடி எம்.எல்.ஏ.பதவியேற்றார். பின்னர் காரைக்குடிக்கு வந்த அவர் நேற்று முதன் முதலில் காரைக்குடியில் உள்ள அரசு பழைய மருத்துவமனை மற்றும் புதிய மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு போதிய அளவில் ஆக்சிஜன் இருப்பில் உள்ளதா என்பது குறித்தும் பணியில் இருந்த டாக்டரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து புறநோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி உள்ளிட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிதாக முதல்-அமைச்சர் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தினார். தற்போது தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போதிய அளவு ஆக்சிஜன்

அவர்களுக்கு போதுமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதா என்றும், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளதா என்பதும் குறித்தும், அரசு மருத்துவமனையில் போதிய அளவில் டாக்டர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் உள்ளார்களா என்பதை குறித்தும் ஆய்வு செய்ய அறிவுறுத்தியதையடுத்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டேன்.இங்கு டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து கேட்டபோது போதிய அளவில் உள்ளதாக தெரிவித்தனர். இதுதவிர தேவையான மருந்துகள் அனைத்தும் உள்ளது. இதுதவிர போதிய அளவில் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்