மதுரையில் மேலும் 1331 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுகிறது. அந்த வகையில் நேற்றும் 1,331 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். புதிதாக 4 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-05-13 16:46 GMT
மதுரை,மே.
மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுகிறது. அந்த வகையில் நேற்றும் 1,331 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். புதிதாக 4 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
புதிய உச்சம்
மதுரையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 1,331 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 950 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 581 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல், நேற்று 806 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 625 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 35 ஆயிரத்து 340 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி 7 அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா கேர் சென்டர்களில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7,605 ஆக உயர்ந்துள்ளது.
9 பேர் உயிரிழப்பு
மதுரையில் நேற்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 4 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இறந்தவர்களின் 4 பேர் பெண்கள் ஆவர். இதில் 45, 56, 50 வயது ஆண்கள், 69, 80 வயது முதியவர்கள், 45, 56 வயது பெண்கள், 73, 76 வயது மூதாட்டிகள் அடங்குவர். இவர்களுக்கு கொரோனா நோய் பாதிப்புடன் வேறு சில நோய் பாதிப்பும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்