அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் வரை ரத்து

பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக சென்னை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் 31ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம்அறிவித்துள்ளது.

Update: 2021-05-13 16:23 GMT
உடுமலை
பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக சென்னை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் 31ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம்அறிவித்துள்ளது.
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் 
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கும், அங்கிருந்து எதிர்திசையில் இதே வழித்தடத்தில் பாலக்காட்டிற்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக மதுரைக்கும், அங்கிருந்து எதிர் திசையில் இதே வழித்தடத்தில் திருவனந்தபுரத்திற்கும் ரெயில்கள் அமிர்தா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேசமயம் கொரோனா தொற்று காரணமாக அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் மிக மிக குறைவாக இருந்தது. இதைத்தொடர்ந்து உடுமலை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
ரத்து
திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ரெயில் எண்06343 நாளை 15ந் தேதி முதல் வருகிற 31ந் தேதி வரையும், மதுரையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்ரெயில் எண்06344 வருகிற 16 ந் தேதி முதல் அடுத்தமாதம்ஜூன்ந் தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்