ஜோலார்பேட்டையில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய பெண் கைது

ஜோலார்பேட்டையில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திய பெண் கைது;

Update: 2021-05-13 16:17 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டையில் நின்ற சென்னை-மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் ஏறி சோதனைச் செய்தனர். இருக்கைகளுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ எடையிலான 15 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். 

அந்தப் பெட்டியில் அமர்ந்திருந்த வாலாஜா ரோடு அம்மூர் பகுதியைச் சேர்ந்த ரவியின் மனைவி சரஸ்வதி என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதும், தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரிய வந்தது. அவரை, போலீசார் ைகது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வேலூர் நுகர்வு பொருள் வாணிப கழகத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்