நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

பழனி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-05-13 15:54 GMT
பழனி: 

பழனி அருகே உள்ள கீரனூர், தொப்பம்பட்டி, நரிக்கல்பட்டி, கோரிக்கடவு, மானூர் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. 

தற்போது விவசாயிகள் நெல் அறுவடை செய்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர். 

இப்பகுதியில் நெல்லின் தரத்திற்கேற்ப விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழைக்கு வயல்களில் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் அடைவதால் நஷ்டம் ஏற்படுகிறது. 

மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை திறந்தவெளியில் குவித்து வைத்திருப்பதால் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. 

சில இடங்களில் நெல்லை திறந்தவெளியில் கொட்டி மூடி வைத்துள்ளனர்.

 எனவே விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்