திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு மருத்துவ சேவை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-13 15:46 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தொலைத்தொடர்பு மருத்துவ சேவை
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள்  விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீவிர நடவடிக்கை

தற்போது நிகழ்ந்து வரும் கொரோனா பெருந் தொற்றை தடுக்கும் விதமாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை தினமும் மேற்கொண்டு வருகின்றது. அதில் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நிகழ்ச்சிகள், தடுப்பூசி செலுத்தும் முகாம்கள், காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தீவிர நோய் அறிகுறி கண்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்த்தல், குறைந்த அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளுக்கு அரசு, அரசு சாரா தனியார் கட்டிடங்களில் கொரோனா கவனிப்பு மையங்கள் நடத்துதல் போன்றவை மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்குதல், மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து நோய் தொற்று நீக்குதல் போன்றவற்றை தீவிரமாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

தொலைத்தொடர்பு மருத்துவ சேவை

தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவ உதவி பெற பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் பொருட்டு அவர்களுக்கு உதவும் வகையில் தொலைத்தொடர்பு மருத்துவ சேவையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

இது திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தொலைத்தொடர்பு மருத்துவ சேவைக்கென பிரத்தியேகமாக மருத்துவர்கள் 24 மணி நேரமும் செயல்படுவார்கள். இந்த மருத்துவர்களை தேவைப்படும் நபர்கள் தொடர்பு கொள்ளும் போது அவர்களின் உடல்நிலை, நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப தேவையான மருத்துவ அறிவுரைகளை, வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் வழங்குவார்கள்.
இதற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 9499933821, 9499933822 ஆகிய தொலைப்சி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்