ரத்த தான முகாம்
இளையான்குடி அருகே உள்ள நாகநாதபுரத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.;
இளையான்குடி,
மாவட்ட தலைவர் மணிகண்டன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி தலைவர் ராஜபாண்டியன், மாவட்ட செயலாளர் சண்முக பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி ரத்ததான ரத்த வங்கி டாக்டர் வசந்த் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த சேமிப்பு பணியை செய்தனர். முகாமை சமூக சேவகர் அய்யப்பன், ரத்ததான முகாம் அமைப்பாளர் குழுவினர் செய்திருந்தனர்.