திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதிகளில் காய்கறி சந்தைகள் செயல்பட தடை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட திருத்தணி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-05-13 10:44 GMT
இந்த கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதை தடுக்கும் வகையில் மேற்படி காய்கறி சந்தை, வாரச்சந்தை, தெருமுனை சந்தைகள் செயல்படுவதை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா தெரிவித்தார். மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருவாய்க் 
கோட்டாட்சியர் ஆர்.டி.ஓ. சத்யா அவர்கள் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்