செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தெருக்கூத்து கலைஞர்கள் எமதர்மன் வேடமணிந்து ஜி.எஸ்.டி. சாலை செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் கடைகளுக்கு மாஸ்க் அணியாமல் வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்கள் மீது எமதர்மன் பாசக்கயிறு வீசி பிடித்து செல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாஸ்க் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மாஸ்க் அணிவித்து எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி கூடுவாஞ்சேரி பஸ் நிலையம், ஜி.எஸ்.டி. சாலை, நெல்லிக்குப்பம் சாலை போன்ற பகுதிகளில் நடந்தது. இதில் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.