கொரோனா பாதித்த முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்

கொரோனா தொற்றுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-05-13 05:38 GMT
மதுராந்தகம், 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் (தனி) தொகுதியில் 2011-2016-ம் ஆண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வி.எஸ்.ராஜி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் வேட்டைக்காரகுப்பம்.

கொரோனா தொற்று காரணமாக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்தார்

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

ஊராட்சி மன்றத்தலைவர், அ.தி.மு.க. கிளை பிரதிநிதி, கிளை செயலாளர், மாவட்ட பிரதிநிதி, லத்தூர் ஒன்றிய அவைத்தலைவர், ஒன்றிய செயலாளர், சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர், காஞ்சீபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய இயக்குனர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

மேலும் செய்திகள்