சிவகாசி,
சிவகாசி பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு இமானுவேல்ராஜ் குமார் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். அப்போது சிவகாசி சிவன் கோவில் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஆவுடையப்பன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் சிவகாசி-எஸ்.என்.புரம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 60 பாக்கெட் புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதனை பறிமுதல் செய்த போலீசார் கடையில் இருந்த ரமேஷ் (38) என்பவரை கைது செய்தனர்.